டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசை: ஆஷ்லி பார்டி நம்பர் ஒன் இடத்தை இழக்கிறார் + "||" + World Tennis Rankings

உலக டென்னிஸ் தரவரிசை: ஆஷ்லி பார்டி நம்பர் ஒன் இடத்தை இழக்கிறார்

உலக டென்னிஸ் தரவரிசை: ஆஷ்லி பார்டி நம்பர் ஒன் இடத்தை இழக்கிறார்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி கடந்த 8 வாரங்களாக உலக டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறார்.
சிட்னி,

டோரண்டோவில் நடந்து வரும் கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் நேரடியாக 2-வது சுற்று ஆட்டத்தில் களம் கண்ட ஆஷ்லி பார்டி 7-6 (7-5), 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சோபியா கெனினிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் ஆஷ்லி பார்டியின் நம்பர் ஒன் மகுடம் பறிபோகிறது.

இதேபோட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறி இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அல்லது செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோரில் ஒருவர் நம்பர் ஒன் அரியணையை அலங்கரிக்க உள்ளனர். புதிய தரவரிசை அடுத்த வாரத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமானது - தடகள வீராங்கனை டுட்டீ சந்த்
‘உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமானது’ என்று இந்திய தடகள வீராங்கனை டுட்டீ சந்த் தெரிவித்தார்.
2. திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை
திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி வில்வித்தையில் உலக சாதனை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் 161 அம்புகளை எய்து அசத்தல்.
3. திருச்சியில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவி உலக சாதனை
திருச்சியில் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி 10 வயது மாணவி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.