டென்னிஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஸ்விடோலினா + "||" + Tennis Championship: Svitolina in the semifinals

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஸ்விடோலினா

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஸ்விடோலினா
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரைஇறுதிக்கு ஸ்விடோலினா தகுதிபெற்றார்.
ஷென்ஜென்,

முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ரவுண்ட்-ராபின் முறையில் மோதுகிறார்கள். இதில் ஊதா நிற பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) தோற்கடித்தார். தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த ஸ்விடோலினா முதல் வீராங்கனையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்குவை (கனடா) எதிர்கொண்டார். முதல் செட்டின் போது இடது காலில் காயத்தால் அவதிப்பட்ட பியான்கா சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆடினார். முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்த நிலையில் வலி அதிகமாக இருந்ததால் மேற்கொண்டு விளையாடாமல் விலகினார். இதனால் பிளிஸ்கோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2-வது தோல்வியை தழுவிய பியான்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதியில் சென்னை-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் அரைஇறுதியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் சென்னை-கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2. ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதிக்கு தபால் துறை அணி தகுதி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியின், அரைஇறுதிக்கு தபால் துறை அணி தகுதிபெற்றது.