டென்னிஸ்

ஹோபர்ட் டென்னிஸ் இன்று தொடக்கம்: மீண்டும் களம் இறங்குகிறார், சானியா மிர்சா + "||" + Hobart Tennis starts today: Back to the field, Sania Mirza

ஹோபர்ட் டென்னிஸ் இன்று தொடக்கம்: மீண்டும் களம் இறங்குகிறார், சானியா மிர்சா

ஹோபர்ட் டென்னிஸ் இன்று தொடக்கம்: மீண்டும் களம் இறங்குகிறார், சானியா மிர்சா
இன்று தொடங்க உள்ள ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில், சானியா மிர்சா மீண்டும் களம் இறங்குகிறார்.
ஹோபர்ட்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் அடியெடுத்து வைக்கிறார். குழந்தை பெற்றுக் கொண்டதால் 2 ஆண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்த சானியா மிர்சா, ஹோபர்ட் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். கடின பயிற்சியால் தனது உடல் எடையை 26 கிலோ வரை குறைத்துள்ள சானியா கடைசியாக 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீன ஓபனில் ஆடியிருந்தார்.


இந்த போட்டியில் உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்க்கும் சானியா மிர்சா, முதல் சுற்றில் ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோ (ஜப்பான்) கூட்டணியை நாளை சந்திக்கிறார். 33 வயதான சானியா, அடுத்து வரும் ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட திட்டமிட்டுள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...