டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம் + "||" + Australian Open Tennis: Dominic Thiem in the final

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா), தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சந்தித்தார்.


இதில் முதல் செட்டை பறிகொடுத்த டொமினிக் திம் அதன் பிறகு எழுச்சி கண்டு டைபிரேக்கர் வரை போராடி ஸ்வெரேவின் சவாலுக்கு முடிவு கட்டினார். 3 மணி 42 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் டொமினிக் திம் 3-6, 6-4, 7-6 (7-3), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் ஆஸ்திரியா நாட்டு வீரர் ஒருவர் இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் அவர் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) பலப்பரீட்சை நடத்துகிறார். இது குறித்து டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு வந்து, ரபெல் நடாலிடம் தோற்று இருக்கிறேன். இப்போது, ஜோகோவிச்சை சந்திக்க உள்ளேன். இவர், ஆஸ்திரேலிய ஓபனை 7 முறை வென்று ‘ஆஸ்திரேலிய ஓபனின் ராஜா’வாக திகழ்கிறார். அவருக்கு எதிராக எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்’ என்றார். 


பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் டிமா பாபோஸ் (ஹங்கேரி)- கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ ஜோடியான ஹிசை சூ வெய் (சீனதைபே)- பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு) இணையை துவம்சம் செய்து 2-வது முறையாக இந்த கோப்பைக்கு முத்தமிட்டது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), சோபியா கெனினை (அமெரிக்கா) எதிர்கொள்கிறார். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
2. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி நிதான ஆட்டம்: வசவதா சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தது. அந்த அணி வீரர் அர்பித் வசவதா சதம் அடித்தார்.
3. அகில இந்திய கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி
அகில இந்திய கூடைப்பந்தின் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதிபெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவாவுக்கு எதிரான 2-வது அரைஇறுதியில் தோற்ற போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 8-வது முறையாக ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், டொமினிக் திம்மை போராடி வீழ்த்தி 8-வது முறையாக பட்டத்தை வென்றார்.