டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி + "||" + Maratha Open Tennis: Indian player Sumit Nagel lost in the first round

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
புனே,

3-வது மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 125-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், முன்பு 12-வது இடம் வகித்த செர்பியா வீரர் விக்டர் டிரோக்கியை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 2-6, 7-6 (7-4), 1-6 என்ற செட் கணக்கில் விக்டர் டிரோக்கியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் செட்ரிக் மார்செல் செபி 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த குரோஷியா வீரர் இவோ கார்லோவிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் யூசி சுஜிதா 6-3, 6-0 என்ற நேர்செட்டில் இத்தாலியின் தாமஸ் பாபியனோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் 6-3, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் சால்வட்டோர் காருசோவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. சாய் பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பயிற்சியை தொடங்கினர்
சாய் பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று தங்களது பயிற்சியை தொடங்கினர்.
2. ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் ஜிதேந்தருக்கு வெள்ளிப்பதக்கம்
ஆசிய மல்யுத்த போட்டியில், இந்திய வீரர் ஜிதேந்தருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
3. ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
4. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் பெயஸ், குணேஸ்வரன் தோல்வி
தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது.
5. மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.