டென்னிஸ்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து? + "||" + Corona virus threat: Wimbledon tennis tournament canceled?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து?
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தள்ளிப் போகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது.
லண்டன், 

கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் உலகையே உலுக்கி வருகிறது. இதில் விளையாட்டு வீரர்களும், போட்டிகளும் தப்பிக்கவில்லை. எதிர்பாராத இந்த கொடிய நோயின் தாக்கத்தால் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக் கின்றன. ஜூன் 7-ந் தேதி வரை நடக்க இருந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்படுவதாக ஏற்கனவே சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்து இருந்தது. இந்த தொற்று நோயின் தாக்கம் இங்கிலாந்தில் வெகுவாக காணப்படுகிறது. 

இந்த நிலையில் லண்டனில் ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடைபெற இருக்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தள்ளி வைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்பின் அவசர ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது. இதில் இந்த போட்டியின் தலைவிதி குறித்து முடிவு செய்யப்படுகிறது. 

இதுகுறித்து ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தள்ளிப் போகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம். ரசிகர்களை அனுமதிக்காமல் பூட்டிய ஸ்டேடியத்தில் இந்த போட்டியை நடத்த விரும்பவில்லை. முக்கியமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போட்டி குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவசர நிலையை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஜப்பான் முடிவு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து அவசர நிலையை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.
2. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவசர நிலையை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஜப்பான் முடிவு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவசர நிலையை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.
3. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மத்திய அரசு
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; ஈராக்கில் இருந்து ராணுவ வீரர்களை திரும்ப பெறும் பிரான்ஸ்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈராக்கில் இருந்து பிரான்ஸ் ராணுவ வீரர்களை தற்காலிகமாகத் திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கோவையில் 2-வது நாளாக கிருமி நாசினி தெளிப்பு - தண்டோரா மூலம் விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோவையில் நேற்று 2-வது நாளாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தண்டோரா மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.