ஒலிம்பிக்கில் இருந்து ஹாலெப் விலகல்


ஒலிம்பிக்கில் இருந்து ஹாலெப் விலகல்
x
தினத்தந்தி 30 Jun 2021 2:20 AM GMT (Updated: 30 Jun 2021 2:20 AM GMT)

பின்னங்காலில் காயமடைந்த ஹாலெப் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகினார்.

புச்சாரெஸ்ட்,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து டென்னிஸ் நட்சத்திரங்கள் ரபெல் நடால், வாவ்ரிங்கா, டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளனர். இந்த வரிசையில் உலகின் 3-ம் நிலை டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாெலப்பும் (ருமேனியா) இணைந்துள்ளார். கடந்த மாதம் இத்தாலி ஓபனில் ஆடிய போது பின்னங்காலில் காயமடைந்த ஹாலெப் அதில் இருந்து மீளாததால் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டனில் இருந்து பின்வாங்கினார். அதைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். ‘தேசத்துக்காக களம் இறங்குவதை விட பெரிய கவுரவம் இருக்க முடியாது. ஆனால் பின்னங்கால் காயம் முழுமையாக குணமடைவதற்கு மேலும் நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் வேறு வழியின்றி ஒலிம்பிக்கில் இருந்து விலகல் என்ற கடினமான முடிவை எடுத்திருக்கிறேன்’ என்று ஹாலெப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story