டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் கெர்பர்-ஆஷ்லி + "||" + Wimbledon Tennis: Gerber-Ashley in the semifinals

விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் கெர்பர்-ஆஷ்லி

விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் கெர்பர்-ஆஷ்லி
விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் கெர்பர்-ஆஷ்லி.
லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை டாம்ஜானோவிச்சை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். முன்னாள் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 4-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜாபெரை (துனிசியா) விரட்டியடித்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதே போல் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்தின் விக்டோரியா கொலுபிக்கை வெளியேற்றி முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இளம் வீராங்கனைகளான லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு மோதுகிறார்கள்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், சபலென்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி.
5. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர்- ரூப்லெவ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.