டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீரர் பெரேட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை + "||" + Wimbledon tennis Italian player The record of advancing to the finals

விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீரர் பெரேட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை

விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீரர் பெரேட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
லண்டன், 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி, 18-ம் நிலை வீரரான ஹர்காக்சுடன் (போலந்து) மோதினார். முந்தைய சுற்றில் 8 முறை சாம்பியனான ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஹர்காக்ஸ், பெரேட்டினிக்கு எதிராக தடுமாற்றத்திற்கு உள்ளானார். அதிரடியான ஷாட்டுகளால் மிரள வைத்த பெரேட்டினி 6-3, 6-0, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக இறுதி சுற்றை எட்டியுள்ள பெரேட்டினி, விம்பிள்டன் ஒற்றையரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலி நாட்டவர் என்ற சாதனையையும் படைத்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியும் (ஆஸ்திரேலியா), 13-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் (செக்குடியரசு) மோதுகிறார்கள். முதல்முறையாக விம்பிள்டனில் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இவர்களில் ஆஷ்லி பார்ட்டி ஏற்கனவே பிரெஞ்ச் ஓபனை வென்று இருக்கிறார். ஆனால் பிளிஸ்கோவா இதுவரை எந்த கிராண்ட்ஸ்லாமும் சுவைத்ததில்லை. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் டென்னிஸ்: கோப்பையை வென்ற இந்திய வம்சாவளி வீரர் சமிர் பானர்ஜீ
விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ கைப்பற்றினார்.
2. விம்பிள்டன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்
இந்த வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் , நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
3. விம்பிள்டன் டென்னிஸ் : ஆஷ்லே பார்டி சாம்பியன்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
4. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார்.
5. விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் மார்டோன் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 10-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.