டென்னிஸ்

இரட்டை சகோதரிகளை சந்திக்கும் சானியா ஜோடி + "||" + Tokyo Olympics : Sania Mirza and Ankita Raina's projected path to the women's doubles final

இரட்டை சகோதரிகளை சந்திக்கும் சானியா ஜோடி

இரட்டை சகோதரிகளை சந்திக்கும் சானியா ஜோடி
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிசுக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆடும் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்தோமினை சந்திக்கிறார்.
முதல் தடையை சுமித் நாகல் வெற்றிகரமாக கடந்தால் 2-வது சுற்றில் உலகின் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவுடன் (ரஷியா) மோத வேண்டி வரலாம். ‘கோல்டன்ஸ்லாம்’ கனவுடன் வந்துள்ள ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது முதல் சுற்றில் பொலிவியா வீரர் ஹூகோ டெலியனுடன் மோதுகிறார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி தங்களது முதல் சுற்றில் உக்ரைன் இரட்டை சகோதரிகளான நாடியா கிச்னோக் -லுட்மைலா கிச்னோக் இணையை எதிர்கொள்கிறார்கள்.