சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி


சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி
x
தினத்தந்தி 25 Sep 2021 10:56 PM GMT (Updated: 25 Sep 2021 10:56 PM GMT)

ஆஸ்ட்ராவா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் இரட்டையர் அரைஇறுதி சுற்றில் சானியா மிர்சா (இந்தியா)-சூவாய் ஜாங் (சீனா) ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹோஜூமி-நினோமியா இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆண்டில் முதல் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ள சானியா இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கைட்லின் கிறிஸ்டியன் (அமெரிக்கா)-எரின் ரோட்லைப் (நியூசிலாந்து) இணையுடன் மோதுகிறார்.

Next Story