டென்னிஸ்

உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: தொடக்க ஆட்டங்களில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி + "||" + World Final Round Badminton: Sindhu, Srikanth win in opening matches

உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: தொடக்க ஆட்டங்களில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: தொடக்க ஆட்டங்களில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நேற்று தொடங்கியது.
பாலி, 

உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே களம் காணும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள், ஜோடிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகிறார்கள். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். பெண்கள் ஒற்றையர் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார். 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-16 என்ற நேர்செட்டில் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கினார். அவர் அடுத்த லீக் ஆட்டத்தில் யோனி லியை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனது முதல் ஆட்டத்தில் 21-14, 21-16 என்ற நேர்செட்டில் பிரான்சின் தோமா ஜூனியர் போபோவை தோற்கடித்தார். ஸ்ரீகாந்த் அடுத்த ஆட்டத்தில் குன்லாவுத் விதித்சரனை சந்திக்கிறார். ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து இருக்கும் இந்திய இளம் வீரரான லக்‌ஷயா சென் முதல் லீக் ஆட்டத்தில் 2 முறை உலக சாம்பியனான கென்டோ மோமோட்டாவை (ஜப்பான்) சந்தித்தார். முதல் செட்டில் இருவரும் தலா ஒரு புள்ளி எடுத்து இருந்த நிலையில் மோமோட்டா காயம் காரணமாக விலகினார். இதனால் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. லக்‌ஷயா சென் தனது 2-வது லீக்கில் ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்சென்னை (டென்மார்க்) எதிர்கொள்கிறார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி (பி பிரிவு) ஜோடி 14-21, 18-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் நமி மட்சுயமா-சிஹாரு ஷிதா இணையிடம் தோல்வியை தழுவியது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (ஏ பிரிவு) இணை 16-21, 5-21 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் கிம் அஸ்ட்ருப்-ஆன்டெர்ஸ் காருப் ரஸ்முசென் ஜோடியிடம் வீழ்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சிந்து தகுதி
இந்திய வீராங்கனைகள் மால்விகா பான்சோத், அனுபமா உபாத்யாயா ஆகியோரும் அரைஇறுதியை எட்டினர்.
2. உலக பேட்மிண்டண் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் சிந்து தோல்வி
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் சிந்து கால்இறுதியுடன் நடையை கட்டினார்.
3. உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: சிந்து தோல்வி
உலக இறுதி சுற்று பேட்மிண்டன் லீக் போட்டியில் சிந்து தோல்வியடைந்தார்.
4. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் சிந்து; ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று பி.வி.சிந்து புதிய சாதனை படைத்து உள்ளார்.