சென்னை ஓபன் டென்னிஸ் - தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி


சென்னை ஓபன் டென்னிஸ் - தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி
x

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்றில், இந்திய வீராங்கனைகள் 5 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்

சென்னை,

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்றில், இந்திய வீராங்கனைகள் 5 பேரும் தோல்வி அடைந்துள்ளனர். சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் வரும் 12 முதல் 18 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் தமிழக வீராங்கனைகள் லட்சுமி பிரபா,சாய் சம்ஹிதா உள்ளிட்ட 5 இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், தமிழக வீராங்கனை சாய் சம்ஹிதாவை, ஜப்பான் வீராங்கனை நோவா ஹிபினோ 6 க்கு1 ,6 க்கு 0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

ஜப்பான் வீராங்கனை நைடோவிற்கு எதிரான போட்டியில் 6 க்கு 4, 6 க்கு 1 என்ற புள்ளி கணக்கில் லட்சுமி பிரபாவும் தோல்வி அடைந்தார். இதேபோல், அனைவரும் தகுதி சுற்றிலேயே தோல்வியை தழுவி வெளியேறி உள்ளனர். இருப்பினும், செப்டம்பர் 12 முதல் 18 ம் தேதி வரை நடைபெற உள்ள பிரதான போட்டியில் அங்கிதா ரெய்னா, கர்மன் தாண்டி ஆகிய 2 இந்திய வீராங்கனைகளும் சிறப்பு அனுமதி மூலம் களமிறங்க ஏற்கனவே தேர்வாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story