பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ஆன்ஸ் ஜபேர் தோல்வி


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ஆன்ஸ் ஜபேர் தோல்வி
x

Image Courtesy : AFP 

பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையா, துனிசியாவின் ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

பாரிஸ்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் இன்று காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையா, 7-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

இதில் முதல் செட்டை ஜபேர் 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஹாடட் மையா அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-1 என கைப்பற்றினார். அத்துடன் அரை இறுதிக்கும் முன்னேறினார்.


Next Story