பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்
x

image courtesy: Roland-Garros twitter

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக், கரோலினா முச்சோவாவுடன் மோதினார்.

பாரீஸ்,

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவாவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக், 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் முச்சோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 3-வது முறையாக இகா ஸ்வியாடெக் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.


Next Story