அமெரிக்க ஒபன் டென்னிஸ்: செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் "சாம்பியன்"


அமெரிக்க ஒபன் டென்னிஸ்: செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன்
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 11 Sep 2023 12:10 AM GMT (Updated: 11 Sep 2023 12:14 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரர் டெனில் மெத்வதேவுடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் டெனில் மெத்வதேவை வீழ்த்தி 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.


Next Story