விம்பிள்டன் டென்னிஸ் - மெத்வதேவை வீழ்த்தி அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்


விம்பிள்டன் டென்னிஸ் - மெத்வதேவை வீழ்த்தி அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்
x

இந்த வெற்றியின் மூலம் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 1 வீரரான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும், ரஷியாவின் டேனில் மெத்வதேவும் மோதினர்.

இந்த போட்டியில், அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சும், கார்லோஸ் அல்காரசும் மோத உள்ளனர்.


Next Story