விம்பிள்டன் டென்னிஸ்: ஆடவர் இரட்டையரில் ஆஸ்திரேலிய ஜோடி வெற்றி


விம்பிள்டன் டென்னிஸ்:  ஆடவர் இரட்டையரில் ஆஸ்திரேலிய ஜோடி வெற்றி
x

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் இறுதி போட்டியில், 7-6(5), 6-7(3), 4-6, 6-4, 7-6(10-2) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டமும் தட்டி சென்றது.



லண்டன்,



கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில், ஆடவர் இரட்டையர் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் மற்றும் மேக்ஸ் பர்செல் ஜோடி நடப்பு சாம்பியனான நிகோலா மெக்டிக் மற்றும் மேட் பவிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியில், தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஜோடி அதிரடியாக விளையாடியது. முதல் செட்டை போராடி வென்றது. எனினும், 2வது மற்றும் 3வது செட்டை மெக்டிக் மற்றும் பவிக் ஜோடி வெற்றி பெற்றது. இதனால், போட்டி மெக்டிக் மற்றும் பவிக் ஜோடி பக்கம் சாய்ந்தது.

இந்நிலையில், 4வது செட்டை ஆஸ்திரேலிய ஜோடி வென்றது. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. போட்டியின் வெற்றியை முடிவு செய்யும் 5வது செட்டில் இரண்டு ஜோடிகளும் அதிரடியாக விளையாடினர். இதனால், போட்டியின் நேரம் சென்று கொண்டே இருந்தது.

ஏறக்குறைய 4 மணிநேரம் 11 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியின் இறுதியில், 7-6(5), 6-7(3), 4-6, 6-4, 7-6(10-2) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டமும் தட்டி சென்றுள்ளது.


Next Story