விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அரையிறுதி  சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Tweet : SAI Media

43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரைஇறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும்.

லண்டன் ,

கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 6-7(3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரைஇறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும்.


Next Story