விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்..!


விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்..!
x
தினத்தந்தி 10 July 2022 4:34 PM GMT (Updated: 10 July 2022 4:34 PM GMT)

இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் -ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் மோதினர்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ்விம்பிள்டன் டென்னிஸ்விம்பிள்டன் டென்னிஸ்தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த சாம்பியன் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் -ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 4-6,6-3,6-4,7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றார்.இது விம்பிள்டன் தொடரில் ஜோகோவிச் வென்ற 7வது சாம்பியன் பட்டமாகும்.


Next Story