விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரைபகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்..!


விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரைபகினா அரையிறுதிக்கு முன்னேற்றம்..!
x

image courtesy: Wimbledon twitter

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் மோதினார். இந்த போட்டியில் அஜிலாவை 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று ரைபகினா அரையிறுதிக்கு முன்னேறினார்.


Next Story