விம்பிள்டன்: ஆண்கள் பிரிவில் பட்டம் யாருக்கு? ஜோகோவிச்- கார்லஸ் அல்காரஸ் இன்று மோதல்


விம்பிள்டன்: ஆண்கள் பிரிவில் பட்டம் யாருக்கு? ஜோகோவிச்- கார்லஸ் அல்காரஸ் இன்று மோதல்
x

அல்காரஸ் வென்றால் அவருக்கு இது முதல் விம்பிள்டன் மற்றும் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும்.

லண்டன்,

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-2-வது இடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

இதில் ஜோகோவிச் வாகை சூடினால் 8-வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்று அதிக முறை இந்த பட்டத்தை வென்ற ரோஜர் பெடரரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். அத்துடன் அவருக்கு இது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். அல்காரஸ் வென்றால் அவருக்கு இது முதல் விம்பிள்டன் மற்றும் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும்.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story