பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வியாடெக், கார்சியா அபாரம்


பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வியாடெக், கார்சியா அபாரம்
x

image courtesty: Caroline Garcia twitter

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது.

டெக்சாஸ்,

மொத்தம் ரூ.41 கோடி பரிசுத்தொகைக்கான பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது. தரவரிசையில் 'டாப்-8' இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் மோதுகிறார்கள்.

இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 'டிராசி ஆஸ்டின்' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் டாரியா கசட்கினாவை (ரஷியா) வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கினார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கரோலினா கார்சியா (பிரான்ஸ்) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் கோகோ காப்பை (அமெரிக்கா) வீழ்த்தினார்.


Next Story