பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வியாடெக் 2-வது வெற்றி


பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வியாடெக் 2-வது வெற்றி
x

image courtesy: wta twitter

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது.

டெக்சாஸ்,

'டாப்-8' வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் 'டிராசி ஆஸ்டின்' பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் கரோலினா கார்சியாவை (பிரான்ஸ்) தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை சொந்தமாக்கினார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினா 7-6 (8-6), 6-3 என்ற நேர்செட்டில் கோகோ காப்பை (அமெரிக்கா) சாய்த்து முதல் வெற்றியை ருசித்தார்.


Next Story