ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-07-14 14:54 GMT


கோவை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை வழக்கு

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நடைபெற்றது.

இதில் ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடிக் கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டவர் கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலை மையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடை பெற்று வருகிறது இந்த விசாரணை சென்னை, கோவை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 220 பேரிடம் விசாரணை நடைபெற்று உள்ளது.

விசாரணை

இதையொட்டி சென்னை சி.ஐ.டி. நகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் இதில் கோடநாடு பங்களாவில் இருந்த சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் கோவையை சேர்ந்த மணல் ஒப்பந்த தாரர் ஆறுமுகசாமி, அவருடைய மகன் செந்தில்குமார் மற்றும் அவரது உதவியாளர் பழனிச்சாமி ஆகியோரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வைத்து விசாரணை நடைபெற்றது.

இதே போல் புதுச்சேரியை சேர்ந்த சொகுசு விடுதி உரிமையா ளர் நவீன் பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் லஜி ஓரா ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கார் டிரைவர்

மன்னார்குடியை சேரன் குளத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர், முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் டிரைவராகவும், முதல்-அமைச்சர் அலுவலகத்திற்காக தனியார் டிராவல்ஸ் வாகனமும் ஓட்டியுள்ளார்.

அவரிடம் நேற்று காலை 10 மணி முதல் மாலை வரை விசார ணை நடைபெற்றது. விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், மற்றும் கோடநாடு பங்களா விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. குணசேகரன் அவருக்கு தெரிந்த விவரங்களை கூறினார். பின்னர் அவர் அனுப்பி வைக்கப் பட்டார்.