கல்லூரி மாணவராக நடிக்க உடல் எடையை குறைத்தார், அதர்வா!

தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அதர்வா அடுத்து நடிக்க சம்மதித்து இருக்கும் புதிய படத்துக்கு ‘ஒத்தைக்கு ஒத்த’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. டைரக்டர் பா.ரஞ்சித்திடம் ‘அட்டகத்தி,’ ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களில் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். விஷன் ஐ மீடியா சார்;

Update:2016-12-20 13:07 IST
தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அதர்வா அடுத்து நடிக்க சம்மதித்து இருக்கும் புதிய படத்துக்கு ‘ஒத்தைக்கு ஒத்த’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. டைரக்டர் பா.ரஞ்சித்திடம் ‘அட்டகத்தி,’ ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களில் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். விஷன் ஐ மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். இவர், ‘அரண்மனை’ படத்தை தயாரித்தவர்.

படத்தின் கதாநாயகி முடிவாகவில்லை. நடிகர் தியாகராஜன், ‘அஞ்சாதே’ புகழ் நரேன் ஆகிய இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இவர்களுடன் வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இணைகிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் பர்னீஷ் கூறுகிறார்:-

“மற்றவர்களை சார்ந்து இருக்காமல், சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதை ஒரு மாணவர் உணரும் இடம், கல்லூரி. அத்தகையை மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை, அவர்களில் யார் வலியவன் என்பதில் ஏற்படும் மோதல்கள் மற்றும் காதல் ஆகிய மூன்றையும் மையமாக கொண்டு நகர்வதுதான் படத்தின் கதை.

இந்த படத்துக்காக அதர்வா தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தனது உடல் எடையை குறைத்து இருக்கிறார். தற்போது கதைக்கேற்ற கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் நாங்கள் இருக்கிறோம்.”

மேலும் செய்திகள்