நீயும் நானும் நடுவுல பேயும்
ஆர்.கே-வடிவேல் இணையும் புதிய படம் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ ‘எல்லாம் அவன் செயல்,’ ‘அழகர் மலை’ ஆகிய படங்களின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஆர்.கே. நடித்துள்ள ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம், அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதில் ஆர்.கே.ஜோடியாக இனியா நடித்துள்ளார். அந்த படம் வெளியா;
ஆர்.கே-வடிவேல் இணையும் புதிய படம் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’
‘எல்லாம் அவன் செயல்,’ ‘அழகர் மலை’ ஆகிய படங்களின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஆர்.கே. நடித்துள்ள ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம், அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதில் ஆர்.கே.ஜோடியாக இனியா நடித்துள்ளார். அந்த படம் வெளியாகும் முன்பே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை அவர் தொடங்குகிறார். இந்த படத்துக்கு, ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதில் ஆர்.கே-வடிவேல் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘எல்லாம் அவன் செயல்,’ ‘அழகர் மலை’ ஆகிய 2 படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அந்த படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
‘நீயும் நானும் நடுவுல பேயும்’ படம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. ‘காமெடி’யில் கலக்கி எடுக்கும் ஒரு கதாபாத்திரத்தில், கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் வடிவேல் நடிக்கிறார். முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கி சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற இருக்கிறது.