வா டீல்

தொடர்ந்து ‘தடையற தாக்க’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் ரோல் என அருண் விஜய்க்கு எல்லோரிடமும் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

Update: 2017-01-19 09:43 GMT
இவ்வேளையில் அருண்விஜய் தான் நாயகனாக நடித்து வரும் வா டீல் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். படத்தை அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் ’வா டீல்’ படம் மே மாதம் 1ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளார். அருண் விஜய் ’என்னை அறிந்தால்’ படத்திற்கு முன்பாகவே ’வா டீல்’ படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கார்த்திகா நடித்துள்ளார்.

ரத்தின சிவா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசை தமன்,  ஒளிப்ப்திவு கோபி ஜெகதீஷ்வரன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்