பன்னீர்செல்வம் இயக்க ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி

வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த விஜய் சேதுபதியும், ‘ரேணிகுண்டா’ பட டைரக்டர் பன்னீர்செல்வமும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்கிறார்கள்.;

Update:2017-01-20 13:37 IST
இந்த படத்தை ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் பன்னீர்செல்வம் கூறுகிறார்:-

“முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதை, இது. கதாநாயகி முடிவாகவில்லை. படத்தின் தலைப்பை விரைவில் வெளியிடுவோம். திண்டுக்கல் மாவட்டத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 70 நாட்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். படத்தின் முக்கிய காட்சிகளை தேனி மாவட்டத்தில் படமாக்க முடிவு செய்துள்ளோம்.”

மேலும் செய்திகள்