டியூப் லைட்
நகைச்சுவை -திகில் படம் ‘டியூப் லைட்’ ‘டியூப் லைட்’ என்ற பெயரில், ஒரு நகைச்சுவை-திகில் படம் தயாராகி இருக்கிறது.;
இதில் கதாநாயகனாக நடிப்பதுடன் படத்தின் கதை-திரைக்கதை-வசனம்-இசை-டைரக்ஷன் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார், புதுமுகம் இந்த்ரா. இவருக்கு ஜோடியாக நடிப்பவர், அதிதி. இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய முதல் தமிழ் படம், ‘டியூப் லைட்.’
இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் நடித்துள்ளார். மலையாள பட உலகில் நகைச்சுவை நாயகனாக இருந்து வரும் ப்ரவீன் பிரேம் கதாநாயகனின் நண்பராக ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீதர், இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவி நாராயணன் தயாரித்துள்ளார். படம் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வளர்ந்து இருக்கிறது.
எதையுமே தாமதமாக புரிந்து கொள்ளும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை திரைக்கதையாக கொண்ட படம், இது.