ஆமா நான் பொறுக்கிதான்
வில்லனை பழி வாங்குவதற்காக 5 விதமான தோற்றங்களில், ஜெய் ஆகாஷ் சர்வதேச அளவில் தவறான தொழில் செய்யும் ஆசாமிக்கு ஒரு கணவன்-மனைவியால் பிரச்சினை ஏற்படுகிறது.;
அந்த கணவன்-மனைவியை தீர்த்துக்கட்ட ஆசாமி எடுக்கும் முயற்சியில், மனைவி மட்டும் பலியாகிறாள். அவள் உயிர் பிரியும் நிலையில், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை தேடி கண்டுபிடித்து பழிவாங்கும்படி கணவரிடம் கேட்டுக் கொண்டாள்.
வெகுண்டெழுந்த கணவன் கொலைகார ஆசாமியை தேடி அலைகிறான். கொலைகாரனை அவன் கண்டுபிடித்தானா, இல்லையா? என்பதை கருவாக வைத்து, ஒரு படம் தயாராகிறது. படத்துக்கு, ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
அனிஷா, தீப்தி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், பொன்னம்பலம், சாம்ஸ், சுமன் ஷெட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள். வில்லனாக ஜித்தேந்திரசிங் நடிக்கிறார்.
யு.கே.முரளி இசையமைக்கிறார். ஒளிப் பதிவு-டைரக்ஷன் பொறுப்புகளை தேவராஜ் கவனிக்கிறார். ஷாஜகான், ஆனந்தன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலும், மலேசியா, ஹாங்காங், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.