மன்னர் வகையறா

பூபதி பாண்டியன் டைரக்‌ஷனில் ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரித்து நடிக்கும் விமல்! ‘பசங்க’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘களவாணி’ படத்தின் மூலம் பிரபலமானவர், விமல்.;

Update:2017-01-30 15:12 IST
 ‘வாகை சூடவா,’ ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா,’ ‘தேசிங்கு ராஜா,’ ‘கலகலப்பு,’ ‘மாப்ள சிங்கம்’ உள்பட இதுவரை இவர் 22 படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில், விமல் மார்க்கெட்டில் திடீர் சரிவு ஏற்பட்டது. சரிந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் வகையில் அவர், ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து வருகிறார். சொந்த படமாக இருந்தாலும், தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டு மற்ற நடிகர்-நடிகைகளின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க செய்திருக்கிறார்.

விமலுடன் ஆனந்தி, பிரபு, கார்த்திக், சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சிங்கம்புலி, வம்சி கிருஷ்ணா, ஜெயப்பிரகாஷ், நீலிமா ராணி ஆகியோரும் நடித்து வருகிறார்கள். 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 12-ந் தேதி முதல் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், வார்தா புயல் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. படத்தில், பல நடிகர்-நடிகைகள் இணைந்து நடிக்கும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால், அவர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்