கனவு வாரியம்

‘ஆணழகன்’ சிதம்பரத்தின் மகன் அருண் சிதம்பரம் இயக்கி நடித்துள்ள ‘கனவு வாரியம்’ படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.;

Update:2017-01-31 12:38 IST
வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் படம்

தமிழ்நாட்டில் நிலவிய மின்வெட்டு பிரச்சினையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட படம், இது. திரைக்கு வரும் முன்பே 7 சர்வதேச விருது களையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும் வென்ற படம். 2 ‘ரெமி’ விருதுகளையும் வென்றுள்ளது.

படத்தை பற்றி டைரக்டரும், கதாநாயகனுமான அருண் சிதம்பரம் கூறியதாவது:-

“இந்த படத்தில் கதாநாயகியாக புதுமுகம் ஜியா அறிமுகமாகி இருக்கிறார். இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, செந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஷியாம் பெஞ்சமின் இசையமைத்து இருக்கிறார். எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘ஆணழகன்’ சிதம்பரம் தயாரித்து இருக்கிறார். இணை தயாரிப்பு: கார்த்திக் சிதம்பரம்.

இது, விருதுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. காதல், நகைச்சுவை, குடும்ப பாசம் என அனைத்து அம்சங்களையும் கொண்ட ஜனரஞ்சகமான படம். வார்னர் பிரதர்ஸ் வெளியிடுவதால், படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய படம், ‘கனவு வாரியம்’ என்பது குறிப்பிடத்தக்கது.”

மேலும் செய்திகள்