காதம்பரி
ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் சென்னையில் இருந்து ஊட்டிக்கு செல்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அவர்கள் அடர்ந்த காட்டில் வழி தெரியாமல் சிக்கி தவிக்கிறார்கள்.;
மர்மங்கள் நிறைந்த ‘காதம்பரி’
வழி கேட்டு அருகில் உள்ள ஒரு பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கே ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது. அந்த குழந்தையை காப்பாற்றி தங்களுடன் அழைத்து செல்கிறார்கள். அதன்பிறகு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இப்படி திகில்-மர்மங்கள் நிறைந்த படமாக தயாராகிறது, ‘காதம்பரி.’ இதில். அருள் மகேஷ் கதாநாயகனாகவும், சுமா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். சூர்யா நடித்த ‘பசங்க-2,’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள பேபி பூஷிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறாள்.
ஜி.பிருத்விராஜ் இசையமைக்க, டி.கே.உதயன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங், டைரக்ஷன் பொறுப்புகளை கே.துரைராஜ் கவனிக்க, அரோமா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு ஊட்டி, ஏற்காடு, தேனி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.