எவனவன்

போலீஸ் அதிகாரிகளாக வின்சென்ட் அசோகன் சோனியா அகர்வால் சின்ன தவறுதானே செய்கிறோம்.;

Update:2017-02-14 14:48 IST
‘எவனவன்’ படத்தில்

அதனால் என்ன பெரிதாக வந்துவிடப் போகிறது? என்று நினைத்து ஒரு இளைஞன் செய்த தவறு, அவனை என்ன மாதிரியான சிக்கலில் மாட்ட வைக்கிறது? என்பதை மையக்கருவாக வைத்து, ‘எவனவன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

இந்த படத்தில் வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். அகில், புதுமுகம் சந்தோஷ் இருவரும் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர்.

‘மெய்ப்பொருள்,’ ‘பனித்துளி’ ஆகிய படங்களை இயக்கிய ஜெ.நட்டிகுமார், கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர். அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பெடோ பீட் இசையமைத்து இருக்கிறார்.
படம் சென்னை மற்றும் ஐதராபாத்தில் வளர்ந்து இருக்கிறது. பாடல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்