கவண்

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறி கோ, அயன், மாற்றான், அனேகன் என தொடர் வெற்றிப்படங்கள் தந்த இயக்குனர் கே.வி.ஆனந்த்.. இவர் விஜய் சேதுபதியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

Update: 2017-02-16 09:37 GMT
அரசியல் கலந்த பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. AGS நிறுவனம் தயாரிக்கும் 18வது படமாக வளர்ந்து வரும் இப்படத்திற்கு பெயர் மட்டும் சூட்டப்படாமல் இருந்து வந்தது. ‘அனேகன்’ படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள படம் ‘கவண்’.

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ‘காதலும் கடந்து போகும்’ படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், மடோனா செபாஸ்டியனும் மீண்டும் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ளார். இவரின் இசையில் ஏற்கெனவே சிங்கிள் டிராக்காக வெளிவந்த ‘ஹேப்பி நியூ இயர்...’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ‘கவண்’ படத்தின் மொத்த பாடல்களையும் நாளை (பிப்ரவரி 12-ஆம் தேதி) வெளியிடுகிறார்கள்.

‘கவண்’ படத்தில் டி.ராஜேந்தரை நடிக்க வைத்தது ஏன்? -கே.வி.ஆனந்த்

கடந்த ஆண்டில், ‘அனேகன்,’ ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ்.நிறுவனம், இந்த ஆண்டில் தயாரித்துள்ள முதல் படம், ‘கவண்.’ பல வெற்றி படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் டைரக்டு செய்து இருக்கிறார்.
படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

“கவண் என்றால் உண்டுகோல் என்று பொருள். ஒரு இலக்கை குறி வைத்து அடிக்கும் கருவி. ஒருவரால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் குறி வைத்து ஒரு இலக்கை தாக்குவது, கதை. இதை ஜனரஞ்சகமாக தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறோம். கதாநாயகனாக முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். இயக்குனர்-நடிகர் டி.ராஜேந்தர் மிக முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்.

அது, துணிச்சலும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் சுபாவமும் கொண்ட கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்துக்காக அவரை அணுகியபோது, முதலில் நடிக்க மறுத்தார். இரண்டு மூன்று முறை அவரை சந்தித்து கதை சொன்னபின், சம்மதித்தார். இவரும், விஜய் சேதுபதியும் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டர்களை அதிர வைக்கும்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்து இருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்புக்கு கைதட்டல் காத்திருக்கிறது. கபிலன் வைரமுத்து, இந்த படத்தின் மூலம் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சென்னை, ஐதராபாத், புனே ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”

மேலும் செய்திகள்