கண்டேன் காதல் கொண்டேன்

திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்த ஜோடி பற்றிய படம் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்த ஒரு காதல் ஜோடியை பற்றிய படம்,;

Update:2017-02-17 12:25 IST
 ‘கண்டேன் காதல் கொண்டேன்’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர், வெங்கட் ஜி.சாமி. இவர் கூறுகிறார்:-

கண்டேன் காதல் கொண்டேன் படத்தின் கதைப்படி, நாயகன்-நாயகி இருவரும் கண்டதும் காதல்வசப்படு கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே முதலில் சேர்ந்து வாழலாம். ஒருவருக்கொருவரை பிடித்து இருந்தால், திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதன்படி, திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்கிறார்கள்.

அப்போது, இரண்டு பேரும் வேறு வேறு மனநிலை கொண்டவர்கள் என்பது தெரியவருகிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள்? என்பதே கதை. புதுமுகங்கள் பாலா, அஷ்வினி மற்றும் மயில்சாமி, ‘பத்ரகாளி’ ராஜசேகர், ‘சூது கவ்வும்’ ராதா ஆகியோர் நடித்துள்ளனர். சுரேஷ்தேவன் ஒளிப்பதிவு செய்ய, நாகா இசையமைத்துள்ளார். ஈ.ஆர்.ஆனந்தன் தயாரித்து இருக்கிறார்.”

மேலும் செய்திகள்