நகல்

டைரக்டர் சசியிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர், சுரேஷ் எஸ்.குமார். இவர், ‘நகல்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.;

Update:2017-02-17 12:38 IST
ஒரே ஒரு கதாபாத்திரத்தை கொண்ட ‘நகல்’ படத்துக்காக 3 கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை

ஒரே ஒரு பெண் கதாபாத்திரத்தை மட்டும் கொண்ட கதை, இது. இதில் நடிப்பதற்காக அமலாபால், ரம்யா நம்பீசன், வேதிகா ஆகிய 3 பேரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவாளராக பிரசன்னா, இசையமைப்பாளராக ஆண்டனி ஜார்ஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்கிறார்.

படத்தை பற்றி டைரக்டர் சுரேஷ் எஸ்.குமார் கூறுகிறார்:-

“தேனியில் இருந்து சென்னைக்கு பயணிக்கும் ஒரு பெண்ணின் அமானுஷ்ய அனுபவங்களை கருவாக கொண்டு ‘நகல்’ படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், ‘நகல்’ படத்தின் கதையை எழுதுவது சற்று சவாலாகவே இருந்தது. முழுக்க முழுக்க திகில் அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக ‘நகல்’ இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப் படுத்தக் கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் கதையில் சேர்த்து இருக்கிறேன்.”

மேலும் செய்திகள்