அறம் செய்து பழகு

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமி குதிரை, பாண்டியநாடு, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு ஆகிய படங்களை டைரக்டு செய்த சுசீந்திரன்;

Update:2017-02-17 13:09 IST
சுசீந்திரன் டைரக்‌ஷனில் ‘அறம் செய்து பழகு’

 அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, ‘அறம் செய்து பழகு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இதில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன், இந்த படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
கவிஞர் வைரமுத்து, மதன் கார்க்கி ஆகிய இருவரும் எழுதிய பாடல் களுக்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜே.லட்சுமண் மீண்டும் இந்த படத்தில் சுசீந்திரனுடன் இணைகிறார்.

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்கிறார். இவர், பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தவர். 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.

சுசீந்திரன் டைரக்‌ஷனில் ‘அறம் செய்து பழகு’

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா, பாயும்புலி, மாவீரன் கிட்டு ஆகிய படங்களை டைரக்டு செய்த சுசீந்திரன் இப்போது, ‘அறம் செய்து பழகு’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

இந்த படத்தில் விக்ராந்த், சுதீப் கிஷன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். ஹரீஷ் உத்தமன், சூரி, அப்புகுட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். அன்னை பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகும் இந்த படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்