சங்கிலி புங்கிலி கதவ தொற

டைரக்டர் அட்லீ தயாரித்து,, எம்.ஆர்.ராதாவின் பேரனும், டைரக்டர் பிரியதர்ஷனின் உதவியாளருமான ஹைக் டைரக்டு செய்திருக்கும் படம், ‘சங்கிலி புங்கிலி கதவ தொற.;

Update:2017-02-17 13:18 IST
திகில் கலந்த நகைச்சுவை படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

’ இது, திகில் கலந்த நகைச்சுவை படம்.
இதில் ஜீவா-ஸ்ரீதிவ்யா ஜோடியுடன் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, தம்பிராமய்யா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி, சூரி, தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பற்றி டைரக்டர் ஹைக் கூறுகிறார்:-

“மற்ற எல்லா திகில் கலந்த நகைச்சுவை படங்களில் இருந்து ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். முழுக்க முழுக்க குடும்பங்கள் ரசிக்கக் கூடிய வகையில், படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தின் மூலம் ஜீவா-ஸ்ரீதிவ்யா இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். நிச்சயம் ரசிகர்களை கவர்வார்கள்.”

மேலும் செய்திகள்