அச்சமில்லை அச்சமில்லை

டைரக்டர் அமீர் தனது டீம் ஒர்க்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்துக்கு, “அச்சமில்லை அச்சமில்ல” என்று பெயர் சூட்டியிருக்கிறார்.;

Update:2017-02-28 12:51 IST
டைரக்டர் அமீர் தயாரித்து நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை

 இந்த படத்தில், அமீரின் உதவியாளர் முத்து கோபால் கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்கிறார். சாந்தினி, தருஷி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். அருள்தாஸ், ஜெயப்பிரகாஷ், முனிஷ்ராஜா ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்த படம் குறித்து டைரக்டர் முத்து கோபால் கூறும்போது, “சிறு தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டால், அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே படத்தின் கரு. கோவை, திருப்பூர், சென்னை ஆகிய இடங்கள் கதைக்களங்களாக இருக்கும். வாழ்வியல் போராட்டமாக காட்சிகள் நகரும். காதல் மற்றும் அதிரடி சண்டை காட்சிகளுடன் வியாபார ரீதியிலான படமாக தயாராகி உள்ளது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது” என்றார்.

டைரக்டர் அமீர் கூறும்போது, “படத்தின் கதை சமூக பிரச்சினை ஒன்றை மையப்படுத்தி வித்தியாசமாக இருந்ததால், நானே தயாரிக்க முடிவு செய்தேன். இதில் விவசாயி கதாபாத்திரத்திலும் நான் நடிக்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்