வனமகன்

மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் புதிய படம் ‘வனமகன்’. இதில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.;

Update:2017-03-01 15:09 IST
‘தேவி’ படத்துக்கு பிறகு ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு ‘குமரி கண்டம்’ என்று முதலில் பெயர் வைப்பதாக கூறப்பட்டது. இப்போது ‘வனமகன்’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம்ரவி-ஏ.எல்.விஜய் இணையும் இந்த படம் புதிய கதை களத்தில் உருவாகிறது. ஜெயம் ரவிக்கு வித்தியாசமான படமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

விஜய் டைரக்‌ஷனில், ஜெயம் ரவி நடிக்க

புதிய கதைக்களத்துடன் ‘வனமகன்’

‘போகன்’ படத்தை அடுத்து ஜெயம் ரவி, ‘வனமகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயீஷா சாய்கல் நடிக்கிறார். திங் பிக் ஸ்டுடியோ சார்பில் விஜய் தயாரித்து டைரக்டு செய்கிறார். ‘வனமகன்’ படத்தை பற்றி டைரக்டர் விஜய் கூறுகிறார்:-

“இது, இயற்கையின் மகனை பற்றிய கதை என்பதால் படத்துக்கு, ‘வனமகன்’ என்று பெயர் சூட்டினோம். கற்காலத்துக்கு முன்பு இருந்தே வெகுளித்தனம் என்பது வனப்பகுதியில் வாழும் மக்களின் ரத்தத்தில் கலந்து இருக்கிறது.

எந்தவிதமான பருவநிலையையும் எதிர்கொள்ளும் தைரியம், கட்டுமஸ்தான உடல் அமைப்பு, அடர்ந்த காட்டுப்பகுதிகளில் ஊடுருவி செல்லும் திறன் ஆகிய சிறப்பம்சங்களை கொண்ட ‘வனமகன்’ கதாபாத்திரத்துக்கு ஜெயம் ரவி கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கதை எழுதும்போதே அவரை மனதில் வைத்துதான் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.

இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத புதிய கதைக் களத்தை கொண்ட படம், இது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜுடன் நான் இை-ணைந்திருக்கிறேன். திரு ஒளிப்பதிவு செய்கிறார். முக்கிய காட்சிகளை வியட்நாம், கம்போடியா காடுகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம்.”

மேலும் செய்திகள்