பள்ளி பருவத்திலே
பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம், ‘பள்ளி பருவத்திலே’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.;
‘பள்ளி பருவத்திலே’ படத்தில் இசையமைப்பாளர் சிற்பி மகன் கதாநாயகன் நந்தன்ராம்
இவருக்கு ஜோடியாக புதுமுகம் வெண்பா நடிக்கிறார். இவர், ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். முக்கிய கதாபாத்திரங்களில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் தம்பிராமய்யா, கஞ்சா கருப்பு, ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்பந்தன், ஈ.ராமதாஸ், ‘பருத்தி வீரன்’ சுஜாதா ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள்.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த விஜய் நாராயணன் இசையமைக்கிறார். டி.வேலு தயாரிக்கிறார். வாசுதேவ் பாஸ்கர் கதை- திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். இவர், அருண் விஜய் நடித்த ‘வேதா’ படத்தை தயாரித்தவர். ‘மறுபடியும் ஒரு காதல்’ படத்தை டைரக்டு செய்தவர்.
தஞ்சை மாவட்டம் ஆம்பளாபட்டு என்ற கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.