இணையதளம்

துப்பறியும் போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம் ‘இணையதளம்’ படத்தில், துப்பறியும் போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம் நடித்து இருக்கிறார்.;

Update:2017-03-17 12:17 IST
‘இணையதளம்’ படத்தில்

 இவருக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்வேதா மேனனும் போலீஸ் வேடம் ஏற்றுள்ளார். இவர்களுடன் சுகன்யா, ஈரோடு மகேஷ், ஜி.கவுஷிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஷங்கர்-சுரேஷ் ஆகிய இருவரும் டைரக்டு செய்திருக்கிறார்கள். இருவரும் ஏற்கனவே பல குறும் படங்களை டைரக்டு செய்து இருக்கிறார்கள். உமா ஷங்கர் தயாரித்து இருக்கிறார். அரோல் கரேலி இசைஅமைத்துள்ளார்.

இணையதளத்தில் ஒரு குற்றம் நடக்கிறது. அந்த குற்றம் தொடர்பாக, ‘சைபர் கிரைம்’ போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடிப்பது, கதை. படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடிவடைந்தது. படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

மேலும் செய்திகள்