யார் இவன்
எம்.ஜி.ஆர் நடித்த ‘படகோட்டி,’ சிவாஜிகணேசன் நடித்த ‘உத்தம புத்திரன்,’ ‘அமரதீபம்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், டி.பிரகாஷ்ராவ். இவருடைய மகன் டி.எல்.வி.பிரசாத் 75 தெலுங்கு படங்களை டைரக்டு செய்திருக்கிறார்.;
‘யார் இவன்’ விளையாட்டு பின்னணியில் ஒரு திகில் படம்
இவர்கள் வழியில், மூன்றாவது தலைமுறையாக டி.எல்.வி.பிரசாத்தின் மகன் டி.சத்யாவும் டைரக்டர் ஆகியிருக்கிறார். 4 தெலுங்கு படங்களை இயக்கிய இவர், முதன்முதலாக டைரக்டு செய்துள்ள தமிழ் படத்தின் பெயர், ‘யார் இவன்.’ இந்த படத்தை பற்றி டைரக்டர் சத்யா சொல்கிறார்:-
“இது, கபடி விளையாட்டு பின்னணியில் உருவாகியிருக்கும் திகில் படம். சம்பவங்கள் கோவாவில் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பெரும்பகுதி காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டுள்ளன. சென்னை, விசாகப்பட்டினம், ஐதராபாத் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். ஒரு பாடல் காட்சியை போலந்து நாட்டில் படமாக்கியுள்ளோம்.
பிரபு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். கதாநாயகன்-கதாநாயகியாக சச்சின்-இஷா குப்தா ஆகிய இருவரும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கிஷோர் குமார், சதிஷ், டெல்லி கணேஷ், தன்யா பால கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைத்து இருக்கிறார். பினேந்திரா மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரைனா ஜோஷி தயாரித்துள்ளார். படம், மே மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.”