போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்

பூப்பந்து விலையாட்டு வீரர்களின் அன்றாட வாழ்க்கை முறை, அவர்கள் வாழ்க்கையில் நிகழும் காதல், நட்பு ஆகியவைகளை சித்தரிக்கும் வகையில், ஒரு படம் தயாராகிறது.;

Update:2017-03-17 14:29 IST
பூப்பந்து விளையாட்டை பற்றிய ‘போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்’

இந்த படத்துக்கு, ‘போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

கிஷோர், ராஜேஷ், ஸ்ரீராம், உதய், ரோபோ கணேஷ், ரியா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீராம் ஜி இசையமைக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜபல்லவி ராஜா டைரக்டு செய்ய, நோட்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

சென்னை, மதுரை, ராஜபாளையம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படத்தின் உச்சக்கட்ட காட்சியை மலேசியாவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். பூப்பந்து விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தவும், அந்த விளையாட்டின் தன்மையை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளவும் இந்த படத்தை எடுப்பதாக டைரக்டர் ராஜபல்லவி ராஜா கூறினார்.

மேலும் செய்திகள்