இவன் யாரென்று தெரிகிறதா

‘இவன் யாரென்று தெரிகிறதா’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. ரொமான்ஸ் காமெடியாக உருவாகியுள்ள;

Update:2017-03-18 14:37 IST
இப்படத்தில் அறிமுக நடிகர் விஷ்ணு, ‘வெற்றிவேல்’ புகழ் வர்ஷா மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், பகவதி பெருமாள், ராமச்சந்திரன், அர்ஜுனன், ராஜ்குமார் உட்பட மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் சுசீந்திரனிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்தை, ஓன் சினிமாஸ் நிறுவனம் சார்பாக டி.அசோக்குமார் தயாரித்துள்ளார். ‘மஞ்சப்பை’ புகழ் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 

மேலும் செய்திகள்