சினிமா போலீசை நிஜ போலீஸ் என்று நம்பிய பொதுமக்கள் கதாநாயகனிடம் புகார் கொடுத்தார்கள்
‘பர்மா,’ ‘ஜாக்சன் துரை’ படங்களை இயக்கிய தரணிதரன் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.;
இதில், ‘மெட்ரோ’ பட புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.
குற்ற பின்னணியை கதைக்களமாக கொண்ட படம், இது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு வட சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்போது நடந்த ஒரு தமாசான சம்பவத்தை கதாநாயகன் சிரிஷ் நகைச்சுவையாக விவரித்தார்.
“ராஜா ரங்குஸ்கி படத்தில், ராஜா என்ற போலீஸ் வேடத்தில் நான் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு வட சென்னையில் நடைபெற்றபோது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு சண்டை போட்டார்கள்.
ரோந்து வாகனத்தில் போலீஸ் உடையில் அமர்ந்திருந்த என்னை நிஜ போலீஸ் என்று நம்பி, பொதுமக்களில் சிலர் புகார் கொடுத்தார்கள். “நீங்க போலீஸ்தானே...ஏன் இவர் களை கட்டுப்படுத்தக் கூடாது?” என்று கேட்டார்கள்.
அவர்களிடம், “நான் நிஜ போலீஸ் இல்லை” என்று கூறிவிட்டு, உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டேன்.”