‘காசேதான் கடவுளடா’ படத்துக்காக வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை

‘பந்தா பரமசிவம்,’ ‘புலி,’ ‘போக்கிரி ராஜா’ ஆகிய படங்களை தயாரித்த பி.டி.செல்வகுமார், ‘ஒன்பதுல குரு’ படத்தை டைரக்டு செய்தார்.;

Update:2017-03-28 13:35 IST
 (இவர் இப்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் கேயார் அணியில், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.) அடுத்து இவர், ‘காசேதான் கடவுளடா’ என்ற படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இந்த பெயரில், 1972-ம் வருடம் ஏற்கனவே ஒரு படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. 45 வருடங்களுக்குப்பின், மீண்டும் அதே பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது.

‘காசேதான் கடவுளடா’ படத்தில் பரபரப்பாக பேசப்பட்ட தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

2003-ம் வருடம் திரைக்கு வந்த ‘பந்தா பரமசிவம்’ படம் இந்தியில், ‘ஹவுஸ்புல்-2’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை தெலுங்கில் தயாரித்து டைரக்டு செய்யவும் பி.டி.செல்வகுமார் திட்டமிட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்