களத்தூர் கிராமம்

ஒரு திரைப்படத்தின் கதைக்கு உயிர் கொடுப்பது இசைதான் என்பதை ஒவ்வொரு இளையராஜாவின் படங்களும் உணர்த்தியுள்ளன.;

Update:2017-03-28 13:41 IST
இளையராஜா இசையில், ‘களத்தூர் கிராமம்’

இந்த பட்டியலில் புதிதாக இணைய இருக்கும் படம், ‘களத்தூர் கிராமம்.’ இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் கிஷோர், யாக்னா ஷெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். சரண் கே.அத்வைத்தா டைரக்டு செய்து இருக்கிறார்.

‘களத்தூர் கிராமம்’ படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

“இந்த படத்தின் கதையை நான் எழுத ஆரம்பித்தபோதே இளையராஜாவின் இசைதான் கதைக்கு மிக சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்து விட்டேன். கதையை முழுவதுமாக கேட்டு, அது பிடித்த பிறகே இளையராஜா எங்கள் படத்துக்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்தார். ‘களத்தூர் கிராமம்’ படத்துக்காக பின்னணி இசை மற்றும் 2 பாடல்களை அவர் உருவாக்கி இருக்கிறார்.

கிராமத்து மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெறும் பிரச்சினைதான் எங்கள் படத்தின் கதை கரு. படத்தின் கதாநாயகன் கிஷோர் இளைஞராகவும், முதியவராகவும் 2 வேடங்களில் நடித்து இருக்கிறார். 1980-ம் ஆண்டில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.”

‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு இளையராஜா இசை அமைத்தது எப்படி?

இளையராஜா இப்போதெல்லாம் படத்தின் கதை பிடித்தால்தான் இசையமைக்க ஒப்புக்கொள்கிறார். ‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு அவர் அப்படித்தான் இசையமைத்து கொடுத்து இருக்கிறார். ஒரு கிராமம், அதன் மண், செயற்கை பூச்சு இல்லாத மக்களின் வாழ்க்கை ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ள படம், இது.

இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர், சரண் கே.அத்வைதன். ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்து இருக்கிறார். கதை நாயகனாக நடித்திருப்பவர், கிஷோர். கதைநாயகியாக யக்னா ஷெட்டி நடித்துள்ளார். இவர், சில கன்னட படங்களில் நடித்தவர். அஜய் ரத்னம், தீரஜ் ரத்னம் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் சரண் கே.அத்வைதன் கூறும்போது, “இது, ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை. அந்த கிராமத்தை போலீஸ் வஞ்சிக்கிறது. அவமதிப்பையும், புறக்கணிப்பையும் அனுபவிக்கிற மக்கள், ஒரு கட்டத்தில் போலீசை எதிர்க்கிறார்கள். இதில், வெற்றி யாருக்கு? என்பதே கதை. இது, ஒரு அதிரடி கதை என்றாலும், குடும்பத்தில் நிகழும் நெகிழவைக்கும் பாசப்பகுதிகளும் உண்டு. படத்தை பார்த்த இளையராஜா மகிழ்ந்தும், வியந்தும் பாராட்டினார். ஈடுபாட்டுடன் இசையமைத்தார்.”

மேலும் செய்திகள்